அதிர்ச்சி!! திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் நடன கலைஞர்!!
Sep 14, 2023, 10:20 IST

ஆந்திராவில் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையம் ரோடு பகுதியில் வசித்து வரும் நரசிம்ம ரெட்டி என்பவரது மகள் ஹிமா. 25 வயது நடன கலைஞரான இவர், திருமணமாகி கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 7 வயதில் அகன தீபிகா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடனம் ஆடும் கணேசுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். செப்டம்பர் 10ம் தேதி பெங்களூருவில் நடன நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதனை முடித்து விட்டு ஹிமா தனது நண்பர்களான நடன கலைஞர்களுடன் செப்டம்பர் 12ம் தேதி திருப்பத்தூர் ஏலகிரிக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் 8 பெண்கள் 2 ஆண்கள் என 10 பேர் தங்கினர். இந்நிலையில் நேற்று காலை ஹிமா விடுதி அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை அறையில் இருந்த மற்றொரு பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்து மற்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் போலீசார் விரைந்து சென்று தங்கும் விடுதி மற்றும் ஹிமாவுடன் வந்திருந்த நடன கலைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து அவரது தந்தை நரசிம்ம ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.