Movie prime

மீன் பிரியர்களுக்கு அதிர்ச்சி!! இன்று முதல் மீன் விலை கிடுகிடுவென அதிகரிக்கும் அபாயம்!!

 
fish market
தமிழ்நாட்டின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்து அறிவித்துள்ளது. இந்த மாதங்களில் ஆண்டுதோறும் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.
fishing boat
இந்த வழக்கத்தின் படி, தமிழ்நாட்டில் இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக் காலமாக இருக்கும். தடைக் காலத்தை ஒட்டி சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற 15 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
fish market
மீன்பிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ₹6,000 நிவாரணத் தொகையை ₹10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் போன்ற பிற பணிகளை மேற்கொள்வர். இந்த மீன்பிடித் தடைக்காலத்தின் காரணமாக மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.