நள்ளிரவில் அதிர்ச்சி!! பயங்கர நிலநடுக்கம்!! 123 பேர் பலி!!
Updated: Sep 9, 2023, 09:09 IST

வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் நேற்று நள்ளிரவு 11.11 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், மொராக்கோவின் முக்கிய நகரமான மரகேஷிலிருந்து தென்மேற்கே 71 கி.மீ. தொலைவில் 18.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. 19 நிமிடங்கள் வரை தீவிர தன்மையுடன் இருந்த இந்த நிலநடுக்கம் அதன் பிறகு 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டு பொதுமக்கள் நள்ளிரவில் பதற்றம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

முதற்கட்ட தகவலாக, இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 123 நபர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பல பொதுமக்கள் காயமடைந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இன்னும் மீட்பு பணிகள் தீவிரமாக ஆரம்பமாகவில்லை என்று கூறப்படுகிறது.