Movie prime

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்!!

 
School leave
தமிழ்நாட்டில் வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
bus strike
அதன் காரணமாக, தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் செயல்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டின் பிற முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 650 பேருந்துகளும் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 1,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
bus strike
மேலும், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனால், அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.