Movie prime

மாணவர்கள் பரபரப்பு!! தமிழ்நாட்டில் முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுமா??

 
students
தமிழ்நாட்டில் 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முழுவாண்டு தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகி மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
students with mask
இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான மாநில அரசுகள் தடுப்பு முயற்சியாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த  வகையில், புதுச்சேரியில் 11 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டிலும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. மேலும், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நேற்று சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு காய்ச்சல் பரவல் இல்லை என்று கூறியுள்ளார்.
students
ஆனாலும், 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக அதாவது ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியே தேர்வுகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.