Movie prime

மாணவர்கள் உற்சாகம்!! ஏப்ரல் 18, 19 பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!!

 
School leave
தமிழ்நாட்டில் பொது விடுமுறை தினங்களை தவிர அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற பல காரணங்களால் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 18 மற்றும் 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ther
திருச்சியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சித்திரை மாத தேர் திருவிழா நடைபெற உள்ளது. மேலும், வரும் 19 ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேர் திருவிழாக்களை கண்டுகளிக்க தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
leave
இதன் காரணமாக, வரும் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் அறிவித்துள்ளார். அதனால், வரும் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.