Movie prime

மாணவர்கள் உற்சாகம்!! இன்று முதல் பள்ளிகளுக்கு அரை நாள்!!

 
leave
தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வி துறை இயக்குனர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இன்று முதல் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், பிற்பகலுக்குப் பின்னர் மாணவர்களை வீட்டுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
child with mask
காய்ச்சல் பரவி வருதல், கோடை வெயில் அதிகரிக்கும் நிலை, மாணவர்களின் ஆரோக்கியம் உடல் நலம் போன்ற காரணங்களால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
students
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் உடல் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி மட்டுமே இயங்கும்.