Movie prime

மாணவர்கள் உற்சாகம்!! மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!!

 
leave
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அவ்வப்போது பல்வேறு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, பொது அறிவு, தன்னம்பிக்கை, தனித்திறன் ஆகியவை மேம்படுகிறது.
Lord Siva
இன்று மகா சிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற உள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, மார்ச் மாதம் 4 ஆம் தேதி நெல்லையில் அய்யா வைகுண்டசாமி அவதார தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதுமாக உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ayya vaikundar
இதனால் மார்ச் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வேறு ஒரு நாள் பணி நாளாக பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.