மாணவர்கள் உற்சாகம்!! இன்று 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை!!

தமிழ்நாட்டில் பொது விடுமுறைகள் தவிர அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து கோவில் திருவிழாக்கள், தேரோட்டங்கள் போன்ற விழாக்களின் காரணங்களால் அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
இன்று அய்யா வைகுண்டசாமி அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் அய்யா வைகுண்டர். அவர் பிறந்த தினமான மாசி 20 ஆம் தேதி ஆண்டுதோறும் அய்யா வைகுண்டர் அவதார திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த திருநாள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெரிய அளவில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதனால், பல மாவட்டங்களில் இருந்தும் இந்த மாவட்டங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன் காரணமாக, இன்று சனிக்கிழமை மார்ச் மாதம் 4 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அந்த அறிவுப்புகளின்படி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.