Movie prime

மாணவர்கள் மகிழ்ச்சி!! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
School leave
இன்று பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வியாழக்கிழமை கனமழை காரணமாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
rain
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்திருந்தது.
leave
அதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.