மாணவர்கள் மகிழ்ச்சி!! மார்ச் 4 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
Feb 24, 2023, 12:28 IST

தமிழ்நாட்டில் பொது விடுமுறைகள் தவிர அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து கோவில் திருவிழாக்கள், தேரோட்டங்கள் போன்ற விழாக்களின் காரணங்களால் அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், வரும் மார்ச் 4 ஆம் தேதி சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் 20 ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி அவதார தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி மாசி 20 ஆம் தேதி வருவதால் அன்று அய்யா வைகுண்டசாமி அவதார தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது. அந்த விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.