Movie prime

மாணவர்கள் மகிழ்ச்சி!! இன்றிலிருந்து ஒரு வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
School leave
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் பள்ளிகளில் முழுஆண்டுத் தேர்வை விரைவாக முடித்து மாணவர்களுக்கு கோடை விடுமுறையை விரைவில் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், சில மாநிலங்களில் நடப்பு கல்வியாண்டு விரைவில் நிறைவடைய உள்ளது.
summer
இந்தியாவின் சில மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் அம்மாநில மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
leave
கடுமையான வெயிலின் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.