மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழ்நாட்டில் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை!!
Apr 22, 2023, 09:02 IST

தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு வரும் ஜூன் 19 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும், மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க நினைக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் கீதா வரும் கல்வியாண்டு கல்லூரிகள் திறப்பு குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், வரும் 2023-24 ஆம் கல்வியாண்டு கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் மாதம் 19 ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 2022-2023 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த ஒரு பருவத்தின் மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை பொறுத்து கல்லூரி இறுதி பணி நாளை கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.