மாணவர்கள் மகிழ்ச்சி!! இன்று பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை!!
Apr 19, 2023, 08:56 IST

தமிழ்நாட்டில் பொது விடுமுறை தினங்களை தவிர அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற பல காரணங்களால் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதனால் அந்த விழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் அதனால் மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல தாமதம் ஆவது போன்ற இடையூறுகள் தவிர்க்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று பூலோக வைகுண்டம் என வைணவர்களால் கொண்டாடப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் அரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தை கண்டுகளிக்க பல்வேறு ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.