Movie prime

மாணவர்கள் அதிர்ச்சி!! இனி சனிக்கிழமைகளிலும் கட்டாய வகுப்பு!!

 
mask college
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்காமல் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் முதலாம் ஆண்டு மாணவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
college students
நடந்து வரும் 2022-2023 கல்வியாண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று தாமதமானது. மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கலாம் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்ட பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதியே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டது.

நேரடியாக உயர்கல்விக்கான வகுப்புகளை தொடங்காமல் முதல் ஒரு வாரத்திற்கு அடிப்படை வகுப்புகளை நடத்தி விட்டு அதன் பிறகு பாடங்களை நடத்த வேண்டும் என்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
college girls
இந்த காரணங்களால், வகுப்புகள் மிக தாமதமாக தொடங்கப்பட்டது. அதனால், பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை உரிய கால அவகாசத்தில் நடத்தி முடிப்பதற்காக இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பாடங்களை நடத்தி முடிக்க கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.