Movie prime

தமிழ்நாடு பொது பட்ஜெட்!! பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் செய்யப்படுமா??

 
tn budget
இன்று காலை வரும் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டு பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3 ஆவது பட்ஜெட். கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில், 2023 மார்ச் 31 நிலவரப்படி தமிழக அரசின் நிலுவை கடன் தொகை ₹6 ,53 ,348 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது. பற்றாக்குறை ₹52 ,781 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
tn budget
பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக படித்துக் காட்டப்பட்டது. பட்ஜெட் உரையை கேட்டு, அதில் சில திருத்தங்களை முதல்வர் பரிந்துரைத்தார். அதன்பிறகு பட்ஜெட் அறிக்கை அச்சுக்கு சென்றுள்ளது என்கிறார்கள். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், அதற்கு முன்பாக மக்களின் மனங்களை கவர வேண்டியுள்ளதால் மக்கள் மனங்களை குளிர வைக்கும் வகையில், குறிப்பாக பெண்களை கவரும் வகையில் இருக்கும் என்கிறார்கள். நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு  மாதம் ₹1000க்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், காலமுறை சம்பளம் என்ற தங்களது வாழ்வாதார கோரிக்கையை பட்ஜெட்டில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய கல்வி இணைச் செயல்பாடு பாடங்களை கற்றுத் தருவதற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறையால், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் ₹5,000 தொகுப்பூதியத்தில் தமிழக அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டார்கள்.
teachers
அதன்படி, தற்போது பகுதி நேர ஆசிரியர்களை 12,000 ஆசிரியர்களுக்கு மேல் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சம்பளம் உயர்த்தப்பட்டு தற்போது ₹10,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரும் 2023 -24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தங்கள் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வது நிறைவேற்றபடுமா என்று எதிர்பார்த்து வருகின்றனர் பகுதி நேர ஆசிரியர்கள்.