Movie prime

தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! ரேஷன் அட்டைதார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

 
ration shop
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என்று அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகவே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ration_shop
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடும்ப நபர்களில் ஒருவரது கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் போது குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருட்களுக்கு மட்டுமே பில் போடப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு முன்னரே பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றுக்கையில், வாங்காத பொருட்களை வாங்கியது போல் பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குறுஞ்செய்திகள் ரேஷன் அட்டைதாரர்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ration shop
அவர்கள் புகார் அளித்தால், ரேஷன் கடை ஊழியர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக திடீர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதில் போலி பில் போடப்பட்டது கண்டறியப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.