Movie prime

தமிழ்நாட்டு அரசு அதிரடி!! இனி 1000 யூனிட் மின்சாரம் இலவசம்!!

 
electricity
தமிழ்நாடு அரசு கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண சலுகையை உயர்த்தி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆணையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கைத்தறி நெசவாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்களாக உயர்த்தி, இம்மாதம் முதல் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
electric board
இந்த சலுகை காரணமாக மின் வாரியத்திற்கு ஏற்படும் 8.41 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தை தமிழ்நாடு அரசு, மின் வாரியத்திற்கு வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல, விசைத்தறி நெசவாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 750 யூனிட் இலவச மின்சாரத்தையும் 1000 யூனிட்களாக உயர்த்தி இம்மாதம் முதல் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
thari
மேலும், 1000 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 70 காசுகள் மட்டும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகை காரணமாக மின் வாரியத்திற்கு ஏற்படும் 53.62 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தை தமிழ்நாடு அரசு, மின் வாரியத்திற்கு வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.