Movie prime

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு!!

 
ration_shop
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்படுகிறது. அட்டையின் வகையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறும்.
ration shop
இந்த நிலையில், ரேஷன் பொருட்கள் எடையை மாற்றி மக்களை ஏமாற்ற கூடாது என்பதால் அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் பொருட்களில் சுகாதாரம் மற்றும் எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் பொருட்களின் எடையில் மாற்றம் இருக்காது என்றும் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ration card
மேலும், மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வரும் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் படி, அரிசியை செறிவூட்டி, அதிக சத்துக்களுடன் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.