Movie prime

இன்று தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட் தாக்கல்!! விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு!!

 
cm velan budget
நேற்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அடுத்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற சபாநாயகர் அப்பாவு தலைமையிலான சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், அடுத்த மாதம் 21 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
velan budget
தொடர்ந்து, 2023 - 2024 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 3 ஆவது வேளாண் துறை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாகிறது.
velan budget
இதில், வேளாண் உழவர் சந்தைகளை மேம்படுத்துவது, சிறுதானிய பயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற செயல்களில் கவனம் செலுத்தப்படும். மேலும், நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.