தெலுங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு!! ₹400 க்கு சிலிண்டர்!!
Oct 16, 2023, 11:27 IST

இந்தியாவின் சில மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் ஆட்சிக்கு அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வரான சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ” தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ₹400 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். அதே போல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகை முழுவதும் மாநில அரசு செலுத்திவிடும்.
ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ₹5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ₹15 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. அத்துடன் சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ₹2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ₹5000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதிலும் முதல் ஆண்டிலேயே ₹3,016 ஆக அதிகரிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ₹4016லிருந்து ₹6016 ஆக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ₹10000 வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் ₹16000 ஆக உயர்த்தப்படும். ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களிலேயே வாக்குறுதிகள் அனைத்து நிறைவேற்றப்படும் “ எனத் தெரிவித்துள்ளார்.