Movie prime

நள்ளிரவில் பயங்கர விபத்து!! தீப்பிடித்து எறிந்த அடுக்குமாடி குடியிருப்பு!! 6 பேர் பலி!!

 
fire accident
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
fire accident
அதில் ஒரு அடுக்குமாடியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் லேசாக புகை வந்துள்ளது, பின்னர் திடீரென பயங்கரமாக தீ பற்றி எரிய தொடங்கியது. அடுத்தடுத்து தளங்களில் வேகமாக பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர்.

மேலும், அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் சிக்கி இருந்த மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர விபத்தில் உடல் கருகி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 4 சிறுமிகள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
fire accident
அந்த பகுதி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டு அதன் காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.