Movie prime

பயங்கர நிலநடுக்கம்!! நிலைகுலைந்த துருக்கி!! தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு!!

 
earthquake
இன்று காலை மத்திய துருக்கி பகுதியில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் குலுங்கி சேதம் அடைந்துள்ளன.
earthquake
இந்த நிலநடுக்கம் கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரத்தில் மையம் கொண்டு 7.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மீட்பு மற்றும் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது. மலாத்யா, தியார்பாகிர் மாகாணங்களில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இதுவரை 10 பேர் இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
earthquake
இந்த நிலநடுக்கம் மற்றும் மீட்பு பணிகள் காரணமாக, அந்நாட்டில் உச்சகட்ட அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை நடந்துள்ள இந்த பயங்கர நிகழ்வு அந்நாட்டு மக்களை மட்டுமின்றி உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.