பிரபல தொழிலதிபரின் தந்தை மாடியில் இருந்து விழுந்து மரணம்!!
Updated: Mar 11, 2023, 11:45 IST

இந்தியாவின் பிரபல முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரிதேஷ் அகர்வால், கடந்த 2012 ஆம் ஆண்டு ஓயோ என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த ஓயோ செயலினியின் மூலமாக நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விடுதி அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொழிலதிபர், ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால், இவர்கள் குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் 1 மணி அளவில் அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் பாதுகாப்பு அதிகாரிகள் காவல்துறையினருக்கு அங்குள்ள 20 ஆவது மாடியில் இருந்து ஒருவர் கீழே விழுந்ததாக தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் தொழிலதிபர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் பர்சத் அகர்வால் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ரிதேஷ் அகர்வால், அவரது மனைவி மற்றும் அவரது தாய் ஆகிய மூவரும் அதே வீட்டில் இருந்துள்ளனர். மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை ரிதேஷ் அகர்வாலுக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.