விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!! இன்னும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு!!
Jul 13, 2023, 07:49 IST

நேற்று இரவு முதல் விடியும் வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்த காரணமாக, சில இடங்களில் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக, ஜூலை 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இன்று சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.