விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!! பள்ளிகளுக்கு விடுமுறை!!
Jun 19, 2023, 07:37 IST

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், நேற்று இரவு முழுவதும் சென்னையில் கனமழை பெய்தது. தற்போதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள காரணத்தால் மாணவர்களின் நலனைக் கருதி சென்னை மாவட்டத்தில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.