Movie prime

இல்லத்தரசிகள் அதிர்ச்சி!! கிடுகிடுவென அதிகரித்து வரும் சின்ன வெங்காயத்தின் விலை!!

 
shallots
காய்கறிகளின் விலை அந்தந்த கால நிலைக்கு ஏற்ப ஏறி இறங்குவது வழக்கம். அதிலும், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தவாறே இருக்கும் நிலையில் திடீரென எகிறிவிடும். அந்த வகையில், தற்போது சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி போன்ற காய்கறிகளின் விலை அதிரடியாக அதிகரித்து செய்திகளில் பேசு பொருளாக மாறி வருகிறது.
tomato
விளைச்சல் குறைவு, பருவநிலை மாற்றம் போன்ற கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை அதிகரித்து உச்சம் தொட்டு பேசு பொருளாக மாறி மீண்டும் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், அப்போது முதல் அதிகரித்து இஞ்சியின் விலை இன்னும் குறைந்தபாடில்லை.
shallots
அந்த வகையில், தற்போது சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை விட ₹50 அதிகரித்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் தற்போது ₹130 க்கு விற்கப்படுகிறது.