Movie prime

சர்ரென சரிந்த தக்காளியின் விலை!! எவ்வளவு தெரியுமா??

 
tomato
காய்கறிகளின் விலை அந்தந்த கால நிலைக்கு ஏற்ப ஏறி இறங்குவது வழக்கம். அதிலும், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தவாறே இருக்கும் நிலையில் திடீரென எகிறிவிடும். அந்த வகையில், தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சியின் விலை அதிரடியாக அதிகரித்து செய்திகளில் பேசு பொருளாக மாறியுள்ளது.
tomato
வரத்து குறைவால் கடந்த இரண்டு வாரங்களாக அதிரடியாக அதிகரித்த தக்காளியின் விலை ₹100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக ₹150 வரை அதிகரித்த தக்காளியின் விலை அதன் பின்னர், சென்னையில் தக்காளி ஒரு கிலோ ₹160 முதல் ₹180 வரை விற்கப்படுகிறது.
tomato
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தக்காளியை வாங்க வடமாநில வணிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் தமிழ்நாட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் விளைச்சல் அதிகரிக்காமல் தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை என்று வணிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று தக்காளியின் விலை ₹20 குறைந்துள்ளது. அதனால், நேற்று ₹130 வரை விற்கப்பட்ட தக்காளி இன்று ₹110 க்கு விற்கப்படுகிறது.