Movie prime

பொதுமக்கள் அதிர்ச்சி!! கிடுகிடுவென உயர்ந்து வரும் அரிசியின் விலை!!

 
rice
தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் அரசியின் விலை மூட்டைக்கு ₹450 வரை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பலசரக்கு பொருட்களின் விலை சற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை பேசு பொருளாக இருந்து வந்தது.
rice
அதை தொடர்ந்து, பருப்பு வகைகளின் விலையும் படிப்படியாக அதிகரித்தது. அந்த வகையில், தற்போது அரசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி குறைவு, வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் அரசியின் விலை அதிகரித்துள்ளது.
rice
தமிழ்நாட்டில் அரசியின் விலை மூட்டைக்கு ₹450 வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பாஸ்மதி அல்லாத மற்ற அரிசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அந்த வகையில், மாநில அரசும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வணிகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.