Movie prime

பொதுமக்கள் அதிர்ச்சி!! ஏலியன் போல் தன்னை உருமாற்றிக் கொண்ட இளம்பெண்!!

 
farija boriya
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தன்னை பிறரிடம் இருந்து வேறுபடுத்திக் கொள்ள பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வித்தியாசமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்வது வரவேற்கத்தக்க செயல் தான். இருந்த போதும், சிலர் மேற்கொள்ளும் வித்தியாசமான முயற்சிகள் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
farija boriya
அந்த வகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை ஏலியன் போல் உருமாற்றிக் கொண்டதால் அவரை பார்க்கும் பொதுமக்கள் அவரை சூனியக்காரி என்று நினைத்து அலறியடித்து ஓடுகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்தவர் ஃப்ரீஜா ஃபோரியா என்ற 27 வயது இளம்பெண் ஒருவர் தான் வித்தியாசமாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைத்து தன்னை முழுவதுமாக உருமாற்றி உள்ளார்.

இவர் தனது 11 வயது முதல் தனது உடல் தோற்றத்தை ஒரு ஏலியன் போல் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். தனது தலை, மூக்கு, காது, உதடு, முடி, கை விரல், நகம் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து மாற்றி உள்ளார். தற்போது அவரை பார்ப்பவர்கள் அவரை உண்மையிலேயே ஒரு ஏலியனை பார்ப்பது போலவே பார்த்து வருகின்றனர்.
farija boriya
மேலும், அவரை எதோ தீய சக்தி என்று நினைத்து அவர் மேல் தேவாலயங்களில் உள்ள புனித நீரை தெளிப்பது போன்ற மாந்திரீக காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர் தனது வித்தியாசமான தோற்றித்திற்காக பாரிஸில் உள்ள நேட்ரோ டேமில் அனுமதி மறுக்கப்பட்டது தனக்கு மிகுந்த மன வேதனை அளித்ததாக கூறியுள்ளார்.