Movie prime

தமிழ்நாட்டில் சுட்டெரித்து வரும் கோடை வெயில்!!

 
summer

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை வெயில் வெளுத்து வருகிறது. அதிக வெயில் காரணமாக, சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெப்பநிலை முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

summer

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், குஜராத்  மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு,  புதுச்சேரியை பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட நாட்களில் வழக்கமான வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Summer

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.