Movie prime

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல்!! இன்று காலை ஆலோசனை கூட்டம்!!

 
corona new
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ma.subramaniam meeting
மேலும், கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இருந்த போதும், காய்ச்சல் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் கொரோனா பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அவ்வப்போது கட்டுப்பாடு விதிமுறைகள், முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது.
corona test
அந்த வகையில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 76 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.