Movie prime

தீவிரமடைந்து வரும் சோதனைகள்!! 5 பேரை கேரளவிற்கு திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறை!!

 
temperature checking
கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகள் இந்த அறிகுறிகளால் நிரம்பி வழிகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா – தமிழக எல்லையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீவிர பரிசோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.  
fever
அதன்படி குமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா - குமரி எல்லையில் உள்ள 5 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் பயணிப்பவர்கள்  காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்களை  தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதிக்கப்படுகின்றனர்.  
temperature check
காய்ச்சல் அறிகுறி இருந்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.அந்த வகையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நேற்று பாறசாலையில் வசித்து வரும் தந்தை, மகன் ஒரு காரிலும், பூவார் பகுதியில் வசித்துவரும் மற்றொரு இளைஞரும்  காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்டனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.தந்தையுடன் வந்த கல்லூரி மாணவர் ஒருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனை மற்றும் உடல் கண்காணிப்பில் காய்ச்சல் அறிகுறியுடன் வந்த 5 பேரை அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர்.