Movie prime

இனி கேரளா இல்லை, கேரளம்!! சட்டப்பேரவையில் தீர்மானம்!!

 
kerala cm
கேரளாவை ஆளும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மாநிலத்தின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதே நேரத்தில் அரசியல் சாசனம் மற்றும் ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்று மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி கேரளாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்  கேரளாவின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில், முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார்.
kerala assembly
அதே நேரத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
kerala cm
முன்னதாக, பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. அதில், பொது சிவில் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.