Movie prime

திருட சென்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! 12 பேர் பலி!!

 
fire accident
கச்சா எண்ணெய் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் திருடிய போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். இந்த அந்த பகுதியில் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
suicide
நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் குழாய்களில் இருந்து கச்சா எண்ணெய் திருடி வெளி சந்தைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று நைஜீரியா நாட்டின் மைஹா நகரில் உள்ள ஒரு கச்சா எண்ணெய் குழாயில் இருந்து ஒரு கும்பல் சட்டவிரோதமாக திருட முயற்சித்துள்ளது.
oil pipe
அந்த கும்பல் கச்சா எண்ணெயை திருடி சட்டவிரோதமாக வெளிச்சந்தையில் விற்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. எண்ணெயை திருடி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கும்பல் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். அந்த பகுதி காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.