Movie prime

தக்காளியை குறிவைத்து திருடும் திருடர்கள்!! ₹1.50 லட்சம் மதிப்புள்ள தக்காளி மூட்டைகள் திருட்டு!!

 
tomato
காய்கறிகளின் விலை அந்தந்த கால நிலைக்கு ஏற்ப ஏறி இறங்குவது வழக்கம். அதிலும், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தவாறே இருக்கும் நிலையில் திடீரென எகிறிவிடும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி பழம் கிலோ ₹5 வரை விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் முதல் தக்காளியின் விலை ₹100 ஐ தாண்டி விற்கப்படுகிறது.
tomato
அந்த வகையில், ₹150 வரை அதிகரித்த தக்காளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று வரை ₹130 க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று விலை குறைந்துள்ளது. இன்று தக்காளி பழம் ஒரு கிலோ மொத்தமாக ₹80 க்கும், சில்லறையாக ₹90 க்கும் விற்கப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளி கிராமத்தில் ₹1.50 லட்சம் மதிப்புள்ள தக்காளி மூட்டைகள் திருடப்பட்டுள்ளன.
tomato
அந்த பகுதியில் உள்ள சோமசேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்து மூட்டைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் 50 கிலோ தக்காளிகளை 60 மூட்டைகளில் வைத்திருந்தார் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மூட்டைகள் திருடப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.