Movie prime

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை மையம்!!

 
rain
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
rain
கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், ஜூன் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
rain
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.