இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!
Jul 5, 2023, 08:12 IST

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்கார வேலன் குடமுழுக்கு விழா நடைபெறுவதால், நாகை வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.