Movie prime

இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

 
School leave
தமிழ்நாட்டில் பொது விடுமுறைகள் தவிர அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து கோவில் திருவிழாக்கள், தேரோட்டங்கள் போன்ற விழாக்களின் காரணங்களால் அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
mandaikadu bagavathy amman
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

leave
இந்த திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 14.03.2023 இன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை (13.05.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளூர் விடுமுறை அளிக்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.