Movie prime

இன்று கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
rain leave
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 5 நாட்கள் வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
rain
இந்நிலையில், இன்று ஜூலை 7 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, தென்காசி, கட்டாயம், கடையநல்லூர், கீழப்பாவூர் ஆகிய 5 வட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.