Movie prime

தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!!

 
tasmac
தமிழ்நாட்டில் இன்று மே 1 ஆம் தேதி, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களையும் இன்று ஒரு நாள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் நேற்றே ‘குடி’ மகன்கள் குவிந்தனர். இன்று அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை என்பதால் பலரும் நிறைய பாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைக்க துவங்கினார்கள்.
saraku bottle
இதன் காரணமாக, நேற்று மாலை முதல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை நாட்களில் தடையை மீறி யாராவது சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  
wine shop
அதன்படி, மே தினத்தை முன்னிட்டு, தமிழக மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது மதுபான விற்பனை விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.