Movie prime

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!! ஆடி அமாவாசை!!

 
leave
இன்று ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இன்று ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை நாள் வருகிறது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வருகிறது.
amavasai
சாஸ்திரப்படி ஆடி மாதத்தில் இரண்டாவதாக வருகின்ற அமாவாசை தினத்தையே ஆடி அமாவாசையாக கருத வேண்டும். ஆனாலும், மாதத்தின் முதல் நாளே அமாவாசையாக இருப்பதால் இந்துக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக நேற்று முதலே இராமேஸ்வரத்தில் குவிந்து வந்தனர்.

உலக பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் கோவிலில் ஆண்டின் அனைத்து நாட்களுமே பக்தர்கள் பரிகாரத்திற்காகவும், தர்ப்பணம் தருவதற்காகவும் செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக காசி, கயாவைப் போலவே இராமேஸ்வரத்திலும் கூட்டம் அலைமோதுகிறது.
rameshwaram
இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு கருதியும் இன்று ஜூலை 17 ஆம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூலை 22 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.