Movie prime

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

 
School leave
இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக ஜூன் மாதம் 24 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உலக பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது.
erwadi dargah
இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்கு பல்வேறு வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு மத நல்லிணக்க திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக மே 21 ஆம் தேதி தர்கா மண்டபத்தில் தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் மௌலித் ஷரிப் தொடங்கப்பட்டது.
erwadi dargah
இன்று ஜூன் 13 ஆம் தேதி அதிகாலை மேள தாளங்களுடன் யானைகள் அணிவிக்க, நாட்டிய குதிரைகள் நாட்டியமாட, சந்தனக்கூடு பவனி வர அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, தர்கா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது