Movie prime

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

 
School leave
தமிழகத்தில் அரசு மற்றும் பொது விடுமுறைகள் தவிர்த்து உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். உள்ளூர் பண்டிகைகள்,  திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகளுக்காக இந்த விடுமுறை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 ஆவது நினைவு தினம் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
immanuel sekaran memorial
இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இம்மானுவேல் சேகரன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். அத்துடன்   “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
immanuel sekaran memorial
இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  செப்டம்பர் 11 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 23 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.