இன்றே கடைசி!! இன்று மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைகிறது!!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று ஜூலை 12 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு 12 ஆம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த நுழைவு தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.
அந்த வகையில், நடப்பாண்டில் நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 10 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு இன்று ஜூலை 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்ப கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் தகுதி உள்ள மாணவர்கள் https://tnhealth.tn.gov.in/ அல்லது https:// tnmedicalselection.org/ என்ற அதிகாரபூர்வ இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.