Movie prime

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிப்பு!!

 
nhai
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10% அதிகரிக்க உள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 800 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், மொத்தம் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
tollgate
தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளியில் விவரங்கள் கூறுகின்றன. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களின் விலை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் 10% அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
toll plaza
இதன் காரணமாக, காருக்கு ₹5 முதல் ₹15 ரூபாய் வரை சுங்க கட்டணத்தில் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக லாரி வாடகை உயர வாய்ப்புள்ளது. லாரி வாடகை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.