Movie prime

சோகம்!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!! பூட்டிய வீட்டுக்குள் அழுகிய பிணங்கள்!!

 
thokku
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள தாந்தவிளை பகுதியை சேர்ந்தவர் பாபு. 46 வயதாகும் இவர் அப்பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.
suicide
இவர் வாடகை வீட்டில் 44 வயதாகும் ஸ்ரீ தேவி மற்றும் 38 வயதாகும் உஷா பார்வதி என்ற இரு சகோதரிகளுடன் வசித்து வருகிறார். இவர்கள் மூன்று பெருகும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே, அவர்கள் அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பெரிது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வீட்டின் ஹாலில் பாபுவும், சமையல் அறையில் ஸ்ரீ தேவியும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
hospital
மேலும், உஷா பார்வதி தரையில் பிணமாக கிடந்துள்ளார். இவர்கள் மூவரின் உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து இரணியல் காவல்துறையினர் அவர்கள் மூவரின் உடல்களையும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.