Movie prime

சோகம்!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

 
suicide
கேரள மாநிலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
thokku
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள காரளம் ஹரிபுரம் பகுதியில், மோகன் - மினி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தமபதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர்களது மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும், அவர்களின் மகன் ஆதர்ஷ் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
thrissur
மோகன் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று நீண்ட நேரத்திற்கு பிறகும் அவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கதவை தட்டி பார்த்த பின்னும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டில் மோகன், மினி, ஆதர்ஷ் ஆகிய 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.  
hospital
பின்னர் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.