சோகம்!! கபடி விளையாடிய 19 வயது மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!
Updated: Mar 8, 2023, 09:48 IST

இந்த காலத்தில் யாருக்கு எப்போது மாரடைப்பு ஏற்படுகிறது என்பதே தெரியவில்லை. எந்த வயது வித்தியாசமின்றி பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து வயதினருக்கும் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைவது தற்போது அதிகரித்து வருகிறது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கபடி விளையாடிய 19 வயது இளம் மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் தனுஜா நாயக். தனுஜா நாயக் துணை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி நண்பர்களுடன் கபடி விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதன் காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனுஜா நாயக் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.