Movie prime

சோகம்!! மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!!

 
suicide
சென்னை கொடுங்கையூர் காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன்(28), சந்தியா(26) என்ற தம்பதிக்கு சந்தோஷ்(8) மற்றும் துர்கேஷ்(2) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் சந்தியா தனது தாய் வீட்டிற்கு இரண்டாவது குழந்தை துர்கேஷை அழைத்து சென்றுள்ளார்.
baby falling
அங்கு வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் குழந்தை துர்கேஷ் விளையாடி உள்ளார். அப்போது, சந்தியா பெற்றோர்களுடன் பேச கீழே சென்ற நேரத்தில், குழந்தை துர்கேஷ் எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.

இதை பார்த்த பெரும் அதிர்ச்சி அடைந்த சந்தியா குழந்தையை உடனே மீட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த குழந்தைக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
hospital
இருப்பினும், குழந்தையின் உடல் மேலும் மோசமானதால் குழந்தை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும், நேற்று குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.